2021 மார்ச் 03, புதன்கிழமை

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் கூட்டுத் திருப்பலி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த விண்ணேற்பு விழா கூட்டுத் திருப்பலி இன்று சனிக்கிழமை (15) நடைபெற்றது.

கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஏ. தேவதாசன், அருட்பணி எம். ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர். 

திருச் சொரூப பவனி

இதேவேளை, புனித விண்ணேற்பு மாதா பேராலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச் சொரூப பவனி நேற்று வெள்ளிக்கிழமை மாலை (14) இடம்பெற்றது.

பொது நவநாள் ஆராதனையை அருட்பணி எம். ஸ்ரனிஸ்லோஸ் நிகழ்த்தியதன் பின்பு திருச்சொரூப பவனி பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி சென்றல் வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, சென். மைக்கல் வீதி, புனித அந்தோனியார் வீதி வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.

திருச்சொரூபம் சென்ற வீதிகளில் உள்ள குறித்த பங்கு மக்களால் அலங்கரிக்கப்பட்டு புனித மரியாளின் திருவுருவங்கள் வைக்கப்பட்டு சொரூபத்தை வரவேற்று வணங்கினர்.

புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .