Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவும் பகலும் உறக்கமே இல்லாத ஜீவன் நான். என்னை உறங்க வைக்காதவள் நீ. உன்மீது மாறா பிரேமையே எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. உனது ஈர்ப்பில் களிப்பு நிலை துன்பத்தையும் இழுத்து வருகிறது.
ஒருமித்த காதலில் கூட வருத்தம் தொடர்கதையா? காதல் பற்றிய நீண்ட சரித்திர கதைகளை படித்து முடிக்க முடியாமல் இருக்கிறது.
ஒலியை ஒளித்து வைத்துக்கொண்டு பாடும் பாடகியாய் இருக்கின்றோம். எதுமே சொல்லாமல் என்னை வென்றபடி இருக்கின்றாய். அன்பின் கூர்மை இதயத்துக்கு எதிரியா?
உன் செவிக்கு சுதந்திரம் கொடு நான் பேசாமல் பரப்பும் சப்த கற்றைகளை செவியூடாக உன் நெஞ்சத்துள் நிரப்பு!
நாளைய எமது வாழ்வு இன்றைய காதலின் அழுத்தமான பிடிக்குள்! விடுபடா சொர்க்கச் சிறைக்குள்! அன்பு சங்கிலி, அறுபடா பேரின்பம். நிறைந்த இல்லறம் வரைந்திட வாராய். காலக்கணங்களை வீணாக்கக்கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .