2021 மார்ச் 03, புதன்கிழமை

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (வயது 30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை (வயது 30) கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

இந்நிலையில் கேட் கர்ப்பமாக இருப்பதாக அவரது நண்பி ஜெசிகா ஹே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு குழந்தைகள் போதும் என்றும் தீர்மானித்துள்ளதாக ஜெசிகா குறிப்பிட்டுள்ளார்.

ராணி எலிசபெத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கேட் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட்டதாகக் கூறப்பட்டது.

கேட் பெற்றெடுக்கும் பிள்ளை ஆணோ, பெண்ணோ அக்குழந்தை தான் இங்கிலாந்தின் சிம்மாசனத்தில் அடுத்து அமரும் என்று கூறப்படுகிறது.


  Comments - 0

 • ikmsm Wednesday, 21 November 2012 04:01 PM

  இதில் என்னப்பா விசேசம் இருக்குது. எங்க பக்கத்துவீட்டு பார்வதி அம்மாவும் கர்ப்பமாகியிருக்காங்க...

  Reply : 0       0

  R.M Muthasar Friday, 23 November 2012 02:25 AM

  இல்ல மச்சான் அவரு இளவரசராம் அதனாலதான் அப்படி....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .