2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

வெங்காயத்தை திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரையில் நூதன முறையில் வெங்காயம் திருடி விட்டு திரைப்பட பாணியில் செலவுக்கு கடைக்கார பணியாளரிடம் பணமும் வாங்கிச் சென்ற திருடன் பிடிபட்டுள்ளார்.

மதுரை கோமதிபுரத்தில் உள்ள ஒரு கடையில் பையுடன் நுழைந்த நபர் அலைபேசியில் பேசிக் கொண்டே தற்போது விலை உச்சத்தில் இருக்கும் வெங்காயத்தை திருடியுள்ளார். 

அதைத்தொடர்ந்து சுற்றும் முற்றும் பார்க்கும் அந்த நபர் யாரேனும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டவாறே திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி பையில் போட்டுக் கொண்டார். 

மேலும், அரிசி வாங்க முன்பணமாக 1500 ரூபாய் கொடுத்ததாகவும், தற்போது அரிசி தேவையில்லை என்பதால் பணத்தை திருப்பி ‌அளிக்குமாறும் கடை பணியாளரிடம் கூறி பணத்தை வாங்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதையடுத்து கடை பணியாளருக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர் வெங்காயம், திண்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது உறுதியானது. 

இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--