2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் பொங்கல் உற்சவம்

Niroshini   / 2021 மார்ச் 04 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக, பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

 கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (04) நடைபெற்றது.

இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த  மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரமே இந்த பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் என்பவற்றை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர், கோவில் நிர்வாகம் சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .