2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

Editorial   / 2017 மே 23 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க

கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதற்காகச் சென்றிருந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு, இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், புத்தளம், கொட்டுகச்சிய கல்குளம பிரதேசத்தைச் சேரந்த நபரை, பொலிஸார், இன்று (23) மாலை கைதுசெய்துள்ளனர்.

கல்குளம் கிராமத்துக்குள் 30 யானைகள் அடங்கிய காட்டு யானைக் கூட்டம்,  நேற்று உட்புகுந்தது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து, புத்தளம் மாவட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரகள் கல்குளம் கிராமத்துக்கு வரழைக்கப்பட்டதுடன்,   அவ்வதிகாரிகள் யானைகளை  விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறித்த இடத்துக்கு வந்த நபரொருவர், அதிகாரிளை தரங்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் மரக்கட்டை மற்றும் கத்தியால் தாக்கவும் முற்பட்டுள்ளார்.

மேற்படி நபர் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் மதுபானம் அருந்தியிருந்ததாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்   பின்னர்  யானைகளை விரட்டியடித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X