குரு பெயர்ச்சி பலன்கள் (21.11.2010 - 09.05.2011)
19-11-2010 08:20 PM
Comments - 2       Views - 31471

 

குரு பெயர்ச்சி பலன்கள் - 21.11.2010 முதல் 09.05.2011 வரை


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல், செயல்களில் தெளிவும் சஞ்ஜல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

21.11.2010 முதல் 09.05.2011 வரை ஸ்ரீ குரு பகவான் பௌர்ணமி திதியில் கார்த்திகை தீபத்தன்று பெயர்ச்சியாகி விரைய குருவாக வேகமாக வருகின்றார். தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். பணத்திற்கு அதிக தட்டுப்பாடு ஏற்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருப்பதாலும் கேது மூன்றிலும் ராகு ஒன்பதிலும் இருப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். சிலர் இருக்கும் இருப்பிடத்தை மாற்றி அமைக்க நேரிடும். குரு பகவான் தான் சொந்த வீட்டிற்கு வருகை தருவதால் புதிய சில மாற்றங்கள் நடக்கும். நீண்ட காலமாக வேலையில்லாதவருக்கு தற்சமயம் வேலை கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். விவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். தங்களின் பிரச்சினைகளுக்கு ஸ்ரீ குரு பகவானை வியாழக்கிழமைகளில் பிரார்த்தனை செய்யவும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
தனது புத்திரர்களுக்காக அதிக பணம் செலவிட நேரிடும். படிப்பில் சிலர் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். இராசியில் செவ்வாய் பகவான் 4ஆம் பார்வையாக பார்ப்பதால் வாகனத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நலம். தீயணைப்பு, இராணுவம், காவல், ஆசிரியர் பணி தேடி வர வாய்புண்டு. திருமணம் நடைபெறும், சிலர் அயல்நாடு செல்வதால் குடும்பத்தில் வசதி வாய்ப்பு உயரும்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
வீட்டு உபயோகத்துறையில் வணிகம் செய்வோருக்கு நல்ல வருவாய் கிடைக்கும். சுய தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும் சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபோக நேரிடும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
சுய தொழில் செய்ய சிலருக்கு கடன் உதவி கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். புதிய கடன் பெற நேரும். முதியோரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கும். மருத்துவத்திற்கு அதிக பணம் செலவிட நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் நடைபெறும். திடீர் ஒப்பந்தம் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். தற்சமயம் சோம்பல் அதிகரிக்கும். தொழி;லதிபர்கள் மற்றும் விவசாயிகள் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
சிலருக்கு வாகனத்தில் சிறு விபத்து ஏற்பட நேரும். உங்கள் இராசியில் 4 கிரகம் ஒன்றாக இருப்பதால் சிலருக்கு உஷ்ணத்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி மற்றும் இசை துறையில் ஆர்வம் அதிகமாகும். 5இல் ராகு உள்ளதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவாகத்தான் இருக்கும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்;. இரவில் பயணம் செய்ய வேண்டாம். இரவில் சிலருக்கு தூக்கம் இன்மை கடுமையாக பாதிக்கும். சிலரின் விலை உயர்ந்த பொருட்கள் களவு போகும். ஆத்ம நண்பர்கள் மூலம் சிலர் நம்பிக்கை துரோகம் அடைய நேரிடும். பங்காளி வகையில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தந்தையாரின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படும். திருச்செந்தூர், கதிர்காமம் போன்ற ஸ்தலங்கள் சென்று வரவும்.

பரிகாரம்:
ஸ்ரீ சுயம்பு விநாயக பெருமானை ஞாயிற்றுக்கிழமையில் வழிபட வேண்டும். ஸ்ரீசபேஸ்வர பூஜையில் கலந்து கொள்ளவும். இங்கு மூதாதையருக்கு மோட்ச தீபம் அவரவர்களே ஏற்ற கோடி புண்ணியம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

ஸ்ரீ குரு பகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை பத்தாம் இடத்திலிருந்து 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்வார். தடைப்பட்ட திருமணம் தற்சமயம் நடை பெறும். நீண்ட காலமாக குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் யாவும் ஒரு தீர்வுக்கு வரும். கூட்டு குடும்பத்தில் வருவாய் அதிகரிக்கும். வாக்குஸ்தானம் பாதிக்கப்படும். நண்பர்களால் திடீர் உதவி கிடைக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு தற்சமயம் தித்திக்கும். தூர தேச பயணம் செய்ய நேரும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
ஆண்களுக்கு விதவை பெண்களால் வீண் பிரச்சினை, அவமானம் மிக பெருத்த அளவில் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது சிறு விபத்து ஏற்படலாம். அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். செய்யும்; தொழில் உத்தியோகத்தில் நிரந்தர லாபம் ஏற்படலாம். புதிதாக அசையா சொத்துக்கள் வாங்கலாம். கட்டிட பணியில் சிலர் அதிக ஈடுபாடு இருக்கும்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
இராணுவம், காவல் துறை பணி கிடைக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். பணியில் இருந்தவருக்கு அதிருப்திநிலை உண்டாகும். ஜென்ம செவ்வாய் கிரக பார்வை உள்ளதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்ட வேண்டும். போக்குவரத்துறையில் வேலை செய்பவருக்கு சற்று சலிப்பு தன்மை உண்டாகும். மேலதிகாரியின் கெடுபிடி அதிகமாகும். விவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

01.03.2011 முதல் 30.03.2011 வரை
சிலர் உணவுத்துறை அதாவது ஹோட்டல் - கடை போன்ற துறையில் தொழில் தொடங்கலாம். அரசியல் தொடர்பு உடையவர்களுக்கும் அதிக செல்வாக்கு உயரும். தனது சொந்த வீட்டை திருத்தம் செய்வார்கள். சக தொழிலாளர்களுடன் ஒத்துழைப்பு இராது. சிலருக்கு நாகதோஷம் இருக்கும். அதன் காரணமாக ராகு - கேது பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
சுகஸ்தான சனீஸ்வரரை குருபகவான் பார்வையால் நன்மை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கள் சற்று லாபம் குறைவாகவே இருக்கும். வயல் காடு போன்றவற்றில் கணிசமான வருவாய் கிடைக்கும். அங்குள்ள மனிதர்களால் திடீர் வரவு கிடைக்கும். சிலருக்கு மூட்டு வலி, கால் வலி,  இடுப்பு வலி போன்றவை அதிகமாக இருக்கும். விஞ்ஞானிகள் சிலர் தனது புதிய கண்டுபிடிப்புகளை வெளி உலகத்திற்கு கொண்டுவருவார்கள். புதிய தொழில் தொடங்க வேண்டாம். வேலைக்காக சிலர் வெளியூர் செல்ல நேரிடும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இராது. சிலருக்கு இடமாற்றம்; ஏற்படலாம். தாய் - தந்தை, மனைவி - கணவர்க்கு உடல்நிலை பாதிப்பு  ஏற்பட வாய்ப்பு உண்டு. பழைய கடன் பிரச்சினைகள் வீடு தேடி வரும். பங்காளி வகையில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். ஆண் வாரிசு இல்லாதவருக்கு தற்சமயம் தித்திக்கும். பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது, வீண் மனக்கவலை உண்டாகாது.

பரிகாரம்:
சிவபெருமனை திங்கட்கிழமையில் தரிசனம் செய்து வரவும். பிரதி வியாழக்கிழமையில் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமியை தரிசித்து முக்கடலை மாலை சாற்றி மனதார பிரார்த்தனை செய்து வரவும். முடிந்தால் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் சகல தோஷமும் அகலும். ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீ பைரவருக்கு மிளகு முடிச்சு போட்ட (சிவப்பு துணி) தீபம் ஏற்றி வரவும்.  
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

ஸ்ரீகுரு பகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை ஒன்பதாம் இடத்திலிருந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். குத்தகை வியாபாரம் நன்றாக இருக்கும். கோவில் திருபணி செய்ய சிலர் முன் வருவர். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினை யாவும் தற்சமயம் சுமுகமான முறையில் முடியும். புதிதாக கார்- வாகனம் வாங்க நேரும். சிலர் கூட்டு தொழில் புரிந்து நூதன முறையில் தொடங்க நேரும். அவரவர் வருமானத்தை இழக்காமல் மென்மேலும் பணம் சம்பாதிக்க முடியும். ஆயுட்காரன் சனி மூன்றிலும், ராகு ஆறிலும், கேது பன்னிரெண்டிலும் சஞ்சாரம் செய்வதால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படுவதற்கு ஏதுக்கள் வலுவாக உள்ளன. மாணவர்கள் நன்றாக படித்து மாகாண அளவில் முதல் மாணவர்களாக தேர்ச்சி அடைவார்கள். சிலர் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு ஆன்மீக வழியில் சன்நியாசம் பெற்று கொள்வர். மனைவியின் அடக்கு முறை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
தடைப்பட்ட திருமணம் தற்சமயம் முடியும். மூதாதையர்களின் சொத்து தற்சமயம் அவரவர்களின் கையில் கிடைக்கும். தாய் வழியில் பல உதவிகள் கிடைக்கும். தாய் மாமனால் வீண் விரோதம் ஏற்படும். ஆன்மீக நண்பர்களின் ஆதரவும் தானாகவே தேடி வரும். புதியதாக சிலர் கட்டிட பணியை தொடங்குவார்கள். மார்கழி மாதத்தில் சிவனுக்கு பூஜை மற்றும் கணபதிக்கு பூஜை செய்தால் தீராத பிரச்சினைகள் யாவும் கானல்நீர் போல தீர்ந்துவிடும். குறிப்பாக அவரவர் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் நன்மை பயக்கும். அரசால் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்க வாய்புண்டு. இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். புதிய மனை அல்லது புதிதாக கட்டிய வீட்டை வாங்க நேரும்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
வெளிநாடு செல்ல எண்ணியவர் எண்ணம் நிறைவேறும். நீண்ட மாதங்களாக பிரிந்து வாழ்ந்த குடும்பத்தினர் தற்சமயம் ஒன்று சேருவர். கலைத்துறையில் ஈடுபடுவர்களுக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும். மார்க்கட்டிங்- முகவர்கள்- பைனான்ஸ்- கமிஷன் போன்ற துறையில் பணம் வருவாய் கிடைக்கும். காவல்துறை – பிராந்திய அரசியல் போன்ற துறையில் சிலர் தேர்ச்சிபெற்று மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்க நேரிடும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
சிலருக்கு தோல் அரிப்பு நோய் பாதித்து பிறகு குணமடைவார்கள். சனி மூன்றிலும் ராகு ஆறிலும் கேது பன்னிரெண்டிலும் கேது ஒன்பதில் குரு இருப்பதால் தங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். மேற்கல்வி பயில்வதற்கு சிலர் அயல் நாடு செல்ல நேரிடும். அந்த இன மனிதர்களால் பல நன்மைகள் நடக்கும். காசி - காயா போன்ற இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்வார்கள். அரசு பண உதவி சிலருக்கு கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்ட வேண்டும்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
விவசாயத்தில் நல்ல வருவாய் இராது. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். உடம்பில் கொப்பளம், ஆறாத புண் வந்து பிறகு குணம் அடையும். ஆசிரியர் பணி, சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கட்டிட பணியில் சிறு பிரச்சினை ஏற்பட்டு பிறகு சரியாகிவிடும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர் தற்சமயம் ஒன்று கூடி வாழ்வார்கள். இரவு நேர பயணத்தை தயவு செய்து தவிர்க்கவும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
செந்நிற பொருட்களால் லாபம் அதிகம் கிடைக்கும். சட்டம், காவல்துறையினருக்கு நல்ல எதிர்காலம் எனலாம். புதிய தொழில் - புத்திர பாக்கியம் - வீடு கட்டுதல் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எதிரிகளின் வீண் மிரட்டல் ஏற்படும். உறவினர்கள் மூலம் வீண் துக்க செய்தி வரும். இந்த மாதம் ஆண்கள், பெண்களிடம் சற்று ஐhக்கிரதையாக நடப்பது நல்லது. பெண்களின் கை ஓங்கி இருக்கும். தற்காலிகமாக பதவி நீக்கம் செய்தவர்களுக்கு அதே பதவி கிடைக்கும். மண் மனைகளால் லாபம் உண்டாகும். திருக்கோயில்களில் தரிசனம் கிடைக்கும். சேமிப்பு லாபம் கைகூடும். நல்ல நண்பர்களின் ஆதரவில் வியாபாரம் உயர்வு பெறும். செய்து வரும் தொழில் அமோக லாபம் உண்டாகும். பெற்றோர்களால் நலம் உண்டாகும். உடல்நல பாதிப்புகள் உண்டாகும். தாயார் சொத்து, வாகனம், வீடு இழப்பு ஏற்படும். கடன் அதிகரிக்கும். பாகப்பிரிவினை ஏற்படும். நஷ்டம், ஏமாற்றம், இடர்பாடுகள் ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.

பரிகாரம்:
அஷ்டமி திதியில் ஸ்ரீ காள பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை, ஊமத்த பூ மாலை, மிளகு முடிச்சு தீபம் ஏற்றி வரவும். தினமும் லிங்காஷ்டகம் ஜபிக்கவும், ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி  அன்பர்களே..!

ஸ்ரீ குருபகாவன் 21.11.2010 முதல் 09.05.2011 வரை 8ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அரசாங்க வேலை தேடிவரும். புதிய தொழில் தொடங்கலாம். நல்ல பல முன்னேற்றம் கிடைக்கும், உடல் சீரான குணம் ஆகும். புதிய பாக்கியம் சித்திக்கும். வாழ்க்கை துணைவரால்; பல நன்மைகள் கிடைக்கும், பழைய கடன்கள் யாவும் தீரும். புதிய நண்பர்களால் தொழில் தொடங்க நேரும். பயம் பல வழிகளில் வரும். நகை, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிததாக வாகன சேர்க்கை உண்டாகும். புதிய வீடு கட்டி அதில் குடிபோக நேரும். குல தெய்வ வழிபாடு செய்தல் அவசியம். பெற்றோர்களுக்கு நலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இராது. கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
இந்த மாதம் சற்று முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காதல் திருமணம் நடைபெறும். ஊடல் நலனில் சற்று கவனம் தேவை. சிலருக்கு கண், கால், முட்டி, பாகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும், கூட்டு குடும்பத்தை விட்டு நீண்ட தூரம் செல்ல நேரும். உறவினர்கள் வருகை அதிகமாக இருக்கும். விவசாயத்தில் நினைத்த விளைச்சலை எடுக்கலாம்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
இந்த மாதம் சற்று பொறுமையுடன் செயற்படுவது அவசியம். எந்த காரியம் எடுத்தாலும் பல தடைகள் ஏற்படும். மனம் நிம்மதி குறைந்து காணப்படும். தன்னைவிட வயது குறைந்;த நண்பரிடம் ஒரு இழிசொல் பெற நேரும். பூர்வீக சொத்தினால் பிரச்சினை தேடி வரும். ஆத்ம நண்பர்களால் நன்மை இராது. விலை உயர்ந்த பொருள் களவுபோக நேரும். விதவை பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். வேலையில்லாதவர்களுக்கு தற்சமயம் வேலை கிடைக்கும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
பணம் ஏராளமாக கையில் கிடைக்கும். ஆனால் தேவையில்லாத வழியில் செலவாகும். சிலர் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்வார்கள்;. சவரம், வெள்ளி, கல் போன்றவை வாங்கி  சேர்க்கலாம்;. நீண்ட காலம் வராமல் இருந்த பணம் தற்சமயம் வரும். பழைய வழக்குகள் தற்சமயம் சாதகமாக முடியும். கிழக்கு திசையிலிருந்து சுப செய்தி வரும். தாய்வழி உறவின் மூலம் சொத்து கிடைக்கும். தடைப்பட்ட மறுதார திருமணம் தற்சமயம் நடக்கும். உயர்கல்வி பயில்வதற்காக சிலர் அயல்நாடு செல்வார்கள். போக்குவரத்துறையில் சற்று கவனத்துடன் இருப்பது நலம்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
தொழில் முடக்கம் ஏற்படும். தூர தேச பயணத்தை தவிர்க்கவும். புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் பணி சிலருக்கு கிடைக்கும். காதல் திருமணம் கைகூடும். கூட்டுக் குடும்பத்தில் கடன் தொல்லை ஏற்படும். காசி- காயா, அயோத்தி போன்ற இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நேரும். மாமனார் மூலம் குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும். செய்யும் தொழிலில் சற்று மந்த நிலை உருவாகும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
அரச வேலைக்கு முயற்சி செய்பவருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். தொழில் அதிபர்களுக்கு லாபம் 2 மடங்கு ஆகும். வெளிநாட்டில் தொழில் புரிபவருக்கு பல பிரச்சினை ஏற்படும். நலிந்த தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெறும். ஊதிய உயர்வு கிடைக்கும், திருட்டு பயம் ஏற்படும். எதிரிகளால் பல தொல்லைகள் ஏற்படும். எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும். மருத்தவ செலவு ஏற்படும்.

பரிகாரம்:
பிரதோஷ காலங்களில் ஸ்ரீ நந்தி தேவருக்கு பன்னீர்- ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யவும். சிவ ஸ்தலத்திற்கு விபூதி மற்றும் சாம்பிராணி அல்லது கற்பூரம் தானம் செய்யவும்;. சபரிமலை செல்லும் அடியவருக்கு வஸ்திரம் தானம் செய்யவும்.
மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள், சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

ஸ்ரீ குரு பகாவன் 21.11.2010 முதல் 11.05.2011 வரை களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி சஞ்சாரம் செய்கின்றார். அஷ்டம குரு பல தொந்தரவுகளை கொடுப்பார். முதலில் சனி தோஷங்களை போக்கிக்கொள்வது நலம் தரும். குரு 8இல் இருப்பதால் குரு பலன் கிடையாது. கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தாய் வகையினரால் பல உதவி பெறக்கூடும். பெற்றோர்களுக்கு பல நோய்கள்; ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுவரை தடைபட்ட காரியங்கள் யாவும் மள மள வென்று தொடர்ந்து நடைபெறும். புதிய நண்பர்களின் வருகை அதிகமாக இருக்கும். பிரயாணங்களில் அதிக பணம் செலவிட நேரும். மருத்துவ செலவு அதிகமாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும். தொட்டது துலங்கும். நகை வியாபாரிகள், செல்வந்தர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
புத்திரர்களால் பல நன்மைகள் கூடும். மகான்களின் கருணையினால் பல நன்மைகள் நடக்கும். பழைய வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும். நகை, சொத்து, ஆடை, ஆபரணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாறுதல்; ஏற்படும். அயல்நாடு சென்று மேற்படிப்பு படிக்க நேரும்;.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அகலும். 2 சக்கர வாகனத்தில் செல்லும்போது அவதானத்துடன் இருக்கவும். போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு பல பிரச்சினைகள் தேடி வரும். விவசாயத்தில் நல்ல வருவாய் இருக்காது.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
சிறு சேமிப்பில் பணம் போட நேரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். தாய் - தந்தைக்கு அதிகமான அளவில் மருத்துவ செலவு செய்ய நேரும். பழைய சொத்தில் சிக்கல், வழக்குகள் ஏற்படும். கல்வியில் அதிக முன்னேற்றம் காணப்படும். விஷ பூச்சி தொல்லை அதிகமாகும். ஆண்கள் விட்டுக் கொடுத்து போவது நலம். இல்லையெனில் மனைவிமார்கள் பிரிந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த நேரும். இரவில் தூக்கம் தடைபடும்;. தூர தேச பயணத்தை தவிர்ப்பது நல்லது. காசி, காயா, ராமேஸ்வரத்திற்கு செல்ல நேரும். குடும்பத்தில் சிலர் தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள நேரும். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். தூர உறவினர்களால் துக்க செய்தி வரும். சிலர் மறைமுக நோய்களால் கடும் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.


01.05.2011 முதல் 31.05.2011 வரை
இதுவரை தடைப்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் ஆத்ம நண்பரை நம்பி பெருத்த மோசடிக்கு ஆளாக நேரும். கட்டிட பணி தொடர்ந்து நடைபெறாமல் போகும். பிரயாணத்தில் சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. கடந்த ஆண்டு ஏற்பட்ட துன்பம் தற்சமயம் பாதிக்கும். வாகன ஓட்டுநர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நலம்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும். சந்திர பகவானுக்கு திங்கட்கிழமையில் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வரவும்.
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

ஸ்ரீ குரு பகாவன் 21.11.2010 முதல் 09.05.2010 வரை களத்திர ஸ்தானமான 6ஆம் இடத்திலிருந்து 7ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி சஞ்சாரம் செய்கின்றார். நீண்ட காலமாக இருந்து வந்த திருமண தடை அகலும். மறுதாரம் விவாகம் சிலருக்கு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை நல்ல தீர்வு பெறும். கடற்கரையில் வசிக்கும் மீனவர்களுக்கு நல்ல பொற்காலாம் ஆகும். கடன் பிரச்சினை ஓரளவிற்கு நிவர்த்தி ஆகும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி மனநிம்மதி அளிக்கும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்று கூடி வாழ நேரும். நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டவர்களுக்கு தற்சமயம் விடிவு காலம் பிறக்கும். நல்ல ராஜயோக காலம் இது. வயதானவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். சிலர் கோயில் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்து கொள்வார்கள்;.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
பணத்திற்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்படும். பழைய கடன்காரர்கள் கழுத்தை பிடிப்பார்கள். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. இரும்பு பொருட்களால் வீண் அபாயம் வரும். திருக்கோவில்களுக்கு செல்ல நேரும். புனித நதிகளில் நீராட நேரும். பெரிய மகான்களின் ஆசியும் ஆசிர்வாதமும் கிடைக்கும்;. தங்கம், மஞ்சள் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
வியாபாரிகளுக்கு நல்ல காலம். அன்றாட தொழில் செய்பவருக்கு நல்ல காலம். சிலர் ஆன்மீக வழியில் செல்ல நேரிடும். வெளிநாடு செல்ல எண்ணியவர்கள் எண்ணம் நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக நடைபெறும்.

01.04.2011 முதல் 30.05.2011 வரை
கறவை மாடு, வெள்ளை ஆடுகளால் நல்ல பலன் கிடைக்கும். புதிதாக வீடு கட்ட சிலர் முயற்சி செய்வார்கள். கட்டிட தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். போக்குவரத்து நீர்நிலைகளில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பெண்கள் அயல் நாடு செல்ல வாய்ப்புகள் உண்டு. கலை துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
புதியதாக தொழில் தொடங்க வாய்ப்புகள் உண்டு. சிலர் தாம் குடியிருக்கும் இடத்தை மாற்றி அமைக்க நேரும். குலதெய்வ வழிபாடு செய்யவும். ஸ்ரீ சரபேஸ்வரர், பைரவர், சிவன் பெருமான் வழிபாடு செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்து வந்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். தாயார் வழியில் சில பிரச்சினைகள் வரும்.

பரிகாரம்:
வன்னிமரத்தின் கீழ் உள்ள சனிபகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யவும். ஹயகீரிவர் சுவாமிக்கு வியாழக்கிழமையில் ஏலக்காய் மாலை சாற்றி அஷ்டோத்திரம் சொல்லவும். தினமும் சூரிய பகவானை சாஷ்டங்க நமஸ்காரம் செய்து வந்தால் நன்மை பயக்கும்.


 

சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக் கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!
                             
ஸ்ரீ குருபகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடமான ரோக ருண சத்துரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி சஞ்சாரம் செய்கின்றார். செய்யும் தொழில் அமையும் வரை அரவனைத்து செல்லுதல் வேண்டும். வீண் வீராப்பு கூடாது. கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த பலன் இராது. புதிய தொழில் தற்சமயம் தொடங்க வேண்டாம். விவசாயத்தில் போதிய லாபம் இராது. பூர்வீக சொத்து தற்சமயம் விற்பனை யாகும். திருமணம் நடைபெறும். தந்தையின் பேச்சை பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். எழுத்தாளர்களின் வருமானம் கூடும். புதிய வாகனம் வாங்க நேரும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
பழவகை, வணிகம் புரிபவர்களுக்கு லாபம் கிடைக்கும். பணத்தில் கவனம் தேவை. கொடுத்த கடனை திரும்ப பெற அலைய வேண்டும். பதவியும் பாராட்டும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பெரிய மகான்களின் ஆசியும் ஆசிர்வாதமும் கிடைக்கும்;. உடலில் நோய் வர வாய்ப்பு உண்டு.

01.02.2011 முதல் 28.02.2011 வரை  
வாழ்க்கை துணைவியால் நல்ல வழி கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகம் செய்பவருக்கு இடமாற்றம் கிடைக்கும். கோபமான பேச்சை குறைப்பது அவசியம். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நேரும். வெள்ளாடு வளர்பில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு ரத்த கொதிப்பு நோய் பாதிக்கும். அசைவம் அதிகமாக உண்பதை தவிர்க்கவும். எடுத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
கலைத்துறையில் உள்ளவர்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிநாடு பயணத்தினால் பலன் குறையும். சொத்து சேர்க்கை கூடும். மூதாதையர்களின் சொத்து கிடைக்கும். மஞ்சள் நிற பொருட்களினால் ஆதாயம் கிடைக்கும். விவசாயத்தில் நல்ல விளைச்சல்; கிடைக்கும்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை  
அயல் நாடு செல்ல வாய்ப்புகள் உண்டு, வேற்று மத நண்பர்களால் பொருளாதார உதவி கிடைக்கும். பணத்திற்கு பிரச்சினை இராது. இளவயது பெண்களால் வீண் பிரச்சினை நேரும். புத்திர பாக்கியம் சிலருக்கு சித்திக்கும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும். பழைய கடனை மீளப்பெறுவதில் சிரமம் ஏற்படும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
தொழில் அதிபர்களின் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மின்சாரம் வகையில் வீண் செலவு ஏற்படும். புதிய வீடு கட்ட நேரும். சிலருக்கு முதுகு வலி, கை, கால் வலி அடிக்கடி ஏற்படும். வெளியூர் செல்;ல நேரும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வரவும். சிவனுக்கு திங்கட்கிழமையில் பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்யவும். ஸ்ரீ ஆஞ்நேய பெருமானுக்கு 108 வெள்ளை வெற்றிலை காம்புடன் கோர்த்து மாலையாக சாற்றவும். செவ்வாய்க்கிழமையில் ஸ்ரீ முருக பெருமானை தரிசனம் செய்து வரவும்.
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே.

ஸ்ரீ குருபகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை அர்த்தாஷ்டக குரு ஸ்தானமான 4ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடமான பூர்வீக புண்ணிய ஸ்தனத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கும். வீட்டின் நிர்வாக செலவு அளவுக்கு அதிகமாக இருக்கும். சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தடைப்பட்ட கட்டிட பணி தொடர்ந்து நடைபெறும். பணத்திற்கு பிரச்சினை இராது. விவசாயத்தில் இலாபம் கிடைக்கும். நெல் பயிர்களால் இலாபம் கிடைக்கும். இருக்கும் தொழிலுடன் வேறு தொழிலிலும் இலாபம் கிடைக்கும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
கடன் பிரச்சினை ஓரளவுக்கு தீரும். வேலை இல்லாதவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். நீர் நிலைகளில் அதிகம் விளையாட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் கூடும். ஊதிய உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்யவும். பெரிய மகான்களின் அருளால் நினைப்பதை சாதிப்பீர்கள். பழைய உறவினர்களை சந்தித்து உதவிகள் பெற நேரும். திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்ய நேரும்.  

01.02.2011 முதல் 28.02.2011 வரை  
புதிய தொழில் தொடங்கலாம். புனித யாத்திரை சிலர் சென்று வரக்கூடும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் சேரும்;. புதிய கடன்பெற இதுவே சரியான நேரம். கலைத்துறையில் இருப்பவருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். ஏழரை சனி ஆரம்பிக்கும் காலம் இது. சிலருக்கு இடமாற்றம், மனமாற்றம் ஏற்படும். தெய்வ பிரார்த்தனையை முழுமையாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் பல தொல்லைகள் ஏற்படும். வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். சிறப்பான பணவளர்ச்சி கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்ள நேரும். சிலர் புதிய கோவில் கட்ட நேரும். பழைய கடன் கொடுக்க நேரும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும்.
 
01.04.2011 முதல் 30.04.2011 வரை
விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும், காணாமல்போன பொருள் கிடைக்கும். புதிதாய் வாகனம், வீட்டு தளபாடங்கள் வாங்க நேரும். எதிரிகளால் நன்மைகள் கிடைக்கும். அவரவர் குலதெய்வ வழிபாட்டை பயபக்தியுடன் செய்துவர நலம் தரும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
தொழிலில் போட்டி அதிகரிக்கும். உடல் அசதி ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் லாபம் கிடைக்கும். துர்க்கை, காளி அம்பாள் போன்ற பெண் தெய்வங்களின் அனுகிரகம் அதிகமாக இருக்கும். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும். கறவை மாடுகள், ஆடுகளால் நல்ல வருவாய் கிடைக்கும். ஜவுளி போன்றவற்றில் நல்;ல வருமானம் கிடைக்கும்.

பரிகாரம்:
இஷ்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்யவும். தினமும் விநாயகரை வழிபட நன்மை கிடைக்கும். பௌர்ணமி தினங்களில் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரவும்.  கந்தசஷ்டி கவசம் தினமும் சொல்லிவர நன்மை கூடும். ஐயப்பன் பக்தர்களுக்கு கறுப்பு வஸ்திரம் தானம் செய்யவும். சோளிங்கர் ஸ்ரீ நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து வரவும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!

ஸ்ரீ குருபகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை சகோதர குரு ஸ்தானமான 3ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடமான அர்த்தாஷ்டம ஸ்தனத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். குழந்தைகள் படிப்பதில் கவனம் செலுத்த முடியாது. ஆசிரியர் தொழில் செய்யும் சிலருக்கு கெட்ட பெயர் உருவாகும். அரசியலில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும். 4ஆம் இட குரு எவ்வளவோ மேலாளர், புத்திரர்களால் பிரிவு ஏற்படும். பணம் தாராளமாக புரளும். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். வீடு, வாகனம், சொத்து விற்பனை செய்ய இதுவே சரியான நேரம். இதய நோளிகள் சற்று கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டி, பொறாமை ஏற்படும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தூர தேச பயணத்தினால் சில நன்மைகள் ஏற்படும். தம்பதிகள் இடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். இக்காலத்தில் யோக திசை, யோக புத்தி நடந்தால் சிலர் அதிகமாக பணம் ஈட்டுவார்கள். தடைபெற்ற கட்டிட பணி தொடர்ந்து நடைபெறும். சிலர் மது, மாது பழக்கத்திற்கு அடிமையாகி அவப்பெயர் நேரும். தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்களால் நல்ல இலாபம் கிடைக்கும்.

01.02.2011 முதல்  28.02.2011 வரை  
புதிய தொழில் தொடங்கலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரிய மகான்களின் அருளும் ஆசியும் கிடைக்கும். தாயாருக்கு நோய் ஏற்பட்டு பிறகு நீங்கிவிடும். திருமண தடை நீங்கும். வீதியோரத்தில் வணிகம் புரிபவருக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் வரும். அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடவும். புதிய வீடு கட்டி முடிப்பார்கள்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
விவசாயத்தில் புஷ்பம் வகைகள் நல்ல லாபம் தரும். புதியதாக சொத்து வாங்க நேரும். பழைய சொத்தை விற்க நேரும். குடும்பத்தில் சுப விரயம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்;கு புதிய பதவிகள் வரும். பெரிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கனிசமான வருவாய் கிடைக்கும்.  

01.04.2011 முதல் 30.04.2011 வரை  
தொலை தொடர்பு மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் வேலை கிடைக்கும். ஜோதிட கல்வி சிலர் கற்க நேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் வரும். தடைப்பட்ட கட்டிட பணி தொடர்ந்து நடைபெறும். திருமண பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்ல எண்ணியவர் எண்ணம் நிறைவேறும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை  
சகோதரர்கள் வழியில் நன்மை கிடைக்கும். ஞானிகளின் உதவியால் பல நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் வரும். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்களில்  நல்ல வருவாய் கிடைக்கும். சற்று கவனம் தேவை. அனைத்து வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் ஸ்ரீ குரு பகவானுக்கு முக்கடலை மாலை சாற்றி 16 தடவை சுற்றி வரவும். சஷ்டி திதியன்று ஏதாவது ஒரு கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யவும்.
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே.

ஸ்ரீ குருபகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை தன குடும்ப ஸ்தான குரு ஸ்தானமான 2ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடமான சாகோதர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். குரு 7ஆம் இடத்தை பார்ப்பதால் திருமணம் நடக்கும். ஜீவன ஸ்தான சுக்கிரன் ஆட்சி பெறுவதால் புதிய வீடுகட்ட யோகம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம். கூட்டு தொழில் செய்பவர்களிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். அரச வேலையில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து சிபாரிசு கடிதம் கிடைக்கும். தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும். வாகனத்தில் சிறு விபத்து ஏற்படும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை
அரச வேலை வீடு தேடி வரும். பிறரிடம் பணம் கொடுத்து ஏமார நேரும். திருமண தடைகள் அதிகம் ஏற்படும். விவசாயத்தில் பயிர்செய்கை கை கொடுக்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்காது. பதவி நீக்கம் ஏற்படும். பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் ஒன்றுசேர வாய்ப்பு உண்டு. புத்திர பாக்கியம் கிடைக்கும்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை
பழைய பாக்கிகள் வந்து சேரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்கள் தற்சமயம் மீட்க நேரும். சொந்த வீடுகட்ட யோகம் உள்ளது. புதிய வாகனம், வீட்டு உபயோகப் பொருள் வாங்க நேரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பு ஆகும். எல்லாவற்றிற்கும் வெற்றி கிடைக்கும். நீர் சம்பந்தப்பட்ட பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
விவசாயத்தில் நல்ல லாபம் தரும். பாம்பு, பூரான், நண்டு போன்றவற்றால் தொல்லை ஏற்படும். சிலருக்கு அயல்நாட்டு பணம் வந்து குவியும். புதிதாக சொத்து வாங்க நேரும். பழைய பாக்கிகள் வந்துசேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்ட வேண்டும். தாயின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஸ்ரீ ராகு பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் பாலாபிஷேகம் செய்ய நலம் கிடைக்கும்.

01.04.2011 முதல் 30.04.2011 வரை
விரும்பிய இடத்தில் இடமாற்றம், அயல் நாட்டு வணிகத்தினால் பல இலட்சங்களை சம்பாதிக்க கூடும். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தினால் நல்ல வருவாய் கிடைக்கும். சிலர் ஆன்மீக பணிகளில் ஈடுபட நேரும். பூர்வீக சொத்து விற்பதில் சிக்கல் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவார்கள், வங்கிக்கடன் கிடைக்கும். மிக கடுமையாக உழைக்க நேரும். பழைய கடன் யாவும் தீரும். பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைக்கும். விவசாயத்தில் பண வரவு சுமாராக தான் இருக்கும்.    

01.05.2011 முதல் 31.05.2011 வரை  
வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உடல் நிலையில் சிலருக்கு ரத்த சோகை ஏற்படும். பிரி;;ந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள், சிலர் ஆன்மீக பணியில் ஈடுபடுவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும். ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள் போன்றவற்றில் லாபம் கிடைக்கும். ஆத்ம நண்பரை தற்சமயம் நம்ப வேண்டாம். நீண்ட நாள் வராத பணம் தற்சமயம் வரும். சிலருக்கு வாயு சம்மந்தப்பட்ட நோய் வரும். பொறுமை ரொம்ப முக்கியம்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் ஸ்ரீ ராகவேந்திர பகவானுக்கு விரதம் இருப்பது, ஸ்ரீ சீரடி சாய்பாபாவுக்கு சிவப்பு வஸ்திரம் வியாழக்கிழமைகளில் சாற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று புளியோதரை தானம் செய்யவும். செவ்வாய்க்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சப்பழம் விளக்கு ஏற்றவும். முடிந்தால் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.
ஸ்ரீ குருபகாவன் 21.11.2010 முதல் 09.05.2011 வரை ஜென்ம ஸ்தான குரு ஸ்தானமான 1ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடமான அர்த்தாஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். அஷ்டசனியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இராது. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி தரும். இக்காலகட்டத்தில் எதிரிகளிடமிருந்து ஒதுங்கி இருப்பது நலம் தரும். மாடு, ஆடு வளர்ப்பு நன்றாக இருக்கும். நல்லவர்கள் விலகி, தீயவர் இணைய அதிக வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு தற்காலிக இடமாற்றம் ஏற்படும். மனம் நிம்மதி இன்றி அலைய நேரும்.  

01.01.2011 முதல் 31.01.2011 வரை
குறிப்பாக கறுப்பு நிற விளை பொருட்களால் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு உஷ்ண கட்டிகள் ஏற்படும். குடும்பத்தில் சிலருக்கு அதிருப்தி நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அவப்பெயர் உண்டாகும். விவசாயத்தில் சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சில மன கசப்புகள் ஏற்படும்.  

01.02.2011 முதல்  28.02.2011 வரை  
நல்ல வருவாய் வரும். தெய்வ அருள் கிட்டும். முகப்பொலிவு கிட்டும். நாணயமாக நடக்க முடியும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் சித்திக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள்களாக குணம் ஆகாத நோய் தற்சமயம் குணமாகும். புதிய தொழில் தொடங்கலாம். நல்லோர் நட்பில் புதிய வேலை கிடைக்கலாம். வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டாகும். நன்மை பல நேரும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இனி அற்புத காலம். கடன் தொகை வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும், இசைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகமாகும். மறைமுக வருமானம் சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு உஷ்ண கட்டிகள் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும்.
 
01.04.2011 முதல் 30.04.2011 வரை
நெருங்கிய நண்பர்களால் மனம் நிம்மதிபோகும். மோட்டார் வாகனத்தில் பல நன்மைகள் ஏற்படும். சனிபகவானை குரு பகவான் பார்ப்பதால் பரிகாரம் செய்து கொண்டால் பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். தாயாருக்கு சிறு உடல் நிலை பாதிப்பு ஏற்படும். செய்யும் தொழிலில் கவனம் தேவை. பங்காளி வகையில் பிரச்சினை ஏற்படும். வீடு, சொத்து, வாகனங்கள் விற்க நேரும். ஓய்வு கிடைக்காமல் உழைக்க நேரும். புதிய வீடு கட்டும் யோகம் உண்டு.

01.05.2011 முதல் 31.05.2011 வரை  
கணவன் - மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நலம். நிலுவையில் உள்ள வழக்கில் பல மாற்றங்கள் ஏற்படும். ஞானிகளின் உதவியால் பல நன்மைகள் கிடைக்கும். திருமண விஷயத்தில் சற்று யோசித்து செய்வது நலம். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல வருவாய் கிடைக்கும். சற்று கவனம் தேவை. திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் சிலர் பெரும் தொகையை அடைய நேரும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள பிரச்சினை தீரும். கப்பல் மாலுமிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.  

பரிகாரம்:
ஸ்ரீவிநாயக பெருமனை ஞாயிற்றுக்கிழமையில் தரிசனம் செய்யவும். ஸ்ரீவசிஸ்டேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சலபேஸ்வர பூஜையில் கலந்து கொள்ளவும். சனிபகவானுக்கு சனிக்கிழமையில் கறுப்பு வஸ்திரம் நல்லெண்ணெய் தானம் செய்யவும்.
ஸ்ரீ குருபகவான் 21.11.2010 முதல் 09.05.2011 வரை விரைய குரு ஸ்தானமான 12ஆம் இடத்திலிருந்து 1ஆம் இடமான ஜென்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கின்றார். அஷ்டசனியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இராது. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி தரும். திருடர் பயம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். நாணயத்தை தக்க நேரத்தில் காப்பாற்ற முடியும். அளவுக்கு அதிகமாக உழைக்க நேரும். சுபகாரியங்கள் நடக்க சிலகாலம் பொறுமையாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளால் சில ஆபத்துகள் ஏற்படும்.

01.01.2011 முதல் 31.01.2011 வரை

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இனி போதிய வருவாய் கிடைக்காது. சிலருக்கு அரசபணி வீடுதேடி வரும். சுபகாரியம் நடைபெறும். தடைப்பட்ட கட்டிட பணி நிறைவேறும். பூர்வீகம் தந்தை வழி சொத்து கிடைக்கும். விவசாயத்தில் விளையும் பொருட்களால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க நேரிடும்.

01.02.2011 முதல் 28.02.2011 வரை  
நல்ல வருவாய் வரும். தெய்வ அருள் கிட்டும். முகப்பொலிவு கிட்டும். நாணயமாக நடக்க முடியும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் சித்திக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள்களாக குணம் ஆகாத நோய் தற்சமயம் குணமாகும். புதிய தொழில் தொடங்கலாம். நல்லோர் நட்பில் புதிய வேலை கிடைக்கலாம். வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டாகும். நன்மை பல நேரும், புதிதாக கறவை மாடு, வெள்ளாடு வாங்க நேரும்.

01.03.2011 முதல் 31.03.2011 வரை  
தனது பதவியை காப்பற்றிகொள்ள பாடுபட வேண்டியிருக்கும். கடன் தொகை வந்து சேரும்.  இசைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகமாகும். மறைமுக வருமானம் சிலருக்கு கிடைக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சகோதர வழியில் அதிருப்தி நிலை ஏற்படும்.
 
01.04.2011 முதல் 31.04.2011 வரை

முன்னோர் சொத்து கிடைக்கும். பழைய கடனை முறையாக அடைக்க நேரும். பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் பருப்பு விளைச்சல் குறைந்து காணப்படும். பால் உற்பத்தி அதிகம் ஆகும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்கும்.

01.05.2011 முதல் 31.05.2011 வரை
திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சிலரும் புதிய கட்டிடம் கட்டும் வாய்ப்பு கிடைக்கும். கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். உறவினர்கள் வருகை அதிகமாக இருக்கும். விவசாயத்தில் நினைத்த விளைச்சலை எடுக்கலாம். தடைப்பட்ட மறுதாரம் திருமணம் தற்சமயம் நடக்கும். உயர்கல்வி பயில்வதற்காக சிலர் அயல்நாடு செல்வார்கள். போக்குவரத்துறையில் சற்று கவனத்துடன் இருப்பது நலம்.

பரிகாரம்:
ஸ்ரீ கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் வெள்ளை பூசணிக்காய் இரண்டாக பிளந்து அதனுள் உள்ள பருப்பை எடுத்துவிட்டு 2 நல்லெண்ணெய் தீபம் போடவும்.  ஸ்ரீ சபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமையில் 4.30 முதல் 6.00 மணிக்குள் தரிசனம் செய்யவும். ஸ்ரீ முருகப் பெருமாளை செவ்வாய்கிழமையில் தரிசிக்கவும். சிவபெருமானுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்யவும்.

"குரு பெயர்ச்சி பலன்கள் (21.11.2010 - 09.05.2011)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
Thangavel 25-02-2011 10:19 PM
எனக்கு ஏற்படும் நிகழ்வுகள் ஓரளவு உங்கள் கருத்தோடு ஒத்து போகின்றன.
Reply .
0
0
priya 16-04-2011 11:29 PM
மிகவும் தெளிவாக இருக்கிறது. குழப்பத்துடன் பார்த்தேன் இப்பொழுது தெளிவாகிவிட்டது
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty