நீர் நிறப்பிய பலூன்களை எறிந்து சாதனை
11-08-2014 04:45 PM
Comments - 0       Views - 1398

3 இலட்சத்து 50 ஆயிரம் நீர் நிறப்பிய பலூன்களை எறியும் போட்டியில் சுமார் 9 ஆயிரம் பேர் பங்குபற்றி உலக சாதனை படைத்த சம்பவமொன்று அமெரிக்காவின், ஸ்போகனில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேற்படி பகுதியில் ஒன்று கூடிய 9,000 பேர், இவ்வாறு 3 இலட்சத்து 50 ஆயிரம் நீர் நிறப்பிய பலூன்களை எறிந்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

சென்டிகி பல்கலைக்கழத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 8,500 பேர் ஒன்று கூடி 100,000 நீர் நிரப்பப்பட்ட பலூன் எறிந்து சாதனை படைத்தனர்.
இச்சாதனையை மேற்படி போட்டி முறிடியதுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பகுதிகளாக பிரிந்த குழுக்கள் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நீர் நிரப்பிய பலூன்களை எறிந்துகொண்டனர்.

பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்த இந்நிகழ்வானது ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதாக அமைந்திருந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"நீர் நிறப்பிய பலூன்களை எறிந்து சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty