தொங்குபாலத்தில், தங்கும்விடுதி...
11-10-2014 04:21 PM
Comments - 0       Views - 2417

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, குஞ்சுக்குளம் தொங்குபால பகுதியில், புதிய தங்கும் விடுதி  ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர்; பா.டெனிஸ்வரன், நேற்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் வட மாகாண முதலமைச்சரின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிதியிலேயே புதிய தங்கும் விடுதி  ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில்  அமைச்சர் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
"தொங்குபாலத்தில், தங்கும்விடுதி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty