இன்றைய பலன்கள் (05.02.2015)
05-02-2015 07:39 PM
Comments - 0       Views - 26

இன்றைய பலன்கள் (05.02.2015)

மேடம்
புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.  வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய செயல்களை செய்து முடிப்பீர்கள். 
அஸ்வினி : மகிழ்ச்சி 
பரணி : சாதனை 
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி


இடபம்
உயர்ந்த மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புக்களின் மூலம் மனதில் உற்சாகம் பிறக்கும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : தனலாபம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம் 
புதியவர்களிடம் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. உடல் நலனில் சிறிது பாதிப்புகள் தோன்றி மறையும்.  சிறுவர்களிடத்தில் மரியாதையாக நடந்து கொள்வது அவசியம். 
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: செலவு


கடகம்
புதிய பொருட்களை வாங்குவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். இடம் மாற்றம் மூலம் மனது மகிழ்ச்சியடையும். பணியில் சிரமம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டீர்கள். 
புனர்பூசம்: நன்மை 
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
வியாபாரத்தில் புதிய லாபங்கள் உண்டாகும். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகம் உண்டாகும். புதிய லாபங்களினால் புதிய முதலீடுகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்.
மகம்: அலைச்சல்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புக்கள் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்.  நிர்வாகத்தில் புதிய பொறுப்புக்கள் கூடி வரும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
பணியிடத்தில் சில மன வேதனைகள் உண்டாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே பலனை எதிர்பபார்க்க முடியும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
பெண்களுக்கு உற்சாகம் காணப்படும். பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். இல்லத்தில் பல புதிய சுப செலவுகள் உண்டாகும். 
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம் 
கேட்டை: லாபம்
 

தனுசு
திடீர் லாபங்கள் மூலம் மனம் மகிழ்ச்சியடையும். முயற்ச்சி செய்த காரியங்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். உடலில் இவ்வளவு நாட்கள் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். 
மூலம்: லாபம்
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி


மகரம்
திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்க உதவுவார்கள். 
உத்திராடம் 2, 3, 4: சுபம் 
திருவோணம்: மகிழ்ச்சி  
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
வியாபாரம் விருத்தியடையும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். 
அவிட்டம் 3, 4: சந்திப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
வாகன ஆசைகள் நிறைவேறும். நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பணியிடத்தில் பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். 
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

"இன்றைய பலன்கள் (05.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty