100 வயது மூதாட்டி தண்ணீரில் சாதனை
08-04-2015 03:27 PM
Comments - 0       Views - 397

நாங்க எல்லாம் சுனாமிலேயே நீச்சல் அடிச்சவங்க என்று சுனாமிக்கு பின்னர் பலர் சொல்லிக்கொள்வர். உனக்கு சொல்லமட்டும் தாண்டா தெரியும். என்கூட போட்டிக்கு வா பாக்கலாம் என்று 100 வயது மூதாட்டி சபதம் இட்டு பார்த்துள்ளீர்களா?

ஜப்பானில் உள்ள மட்சுயாமா நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி, பெண்கள் பிரிவுக்கான 1,500 மீற்றர் பின்புற நீச்சல் போட்டியில் 100 வயதான மீக்கோ நகோகா என்று மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

100 முதல் 104 வயதுக்குரியவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் போட்டியில் இவர் மட்டுமே கலந்து கொண்டபோதிலும் 1500 மீற்றர் தூரத்தை ஒரு மணி நேரம், 15 நிமிடங்கள் மற்றும் 54 விநாடிகளில் பின்புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளதாக ஜப்பான் மாஸ்டர்ஸ் நீச்சல் சங்கம் தெரிவித்துள்ளது. 

அவரது சாதனையை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தனைக்கும் மீக்கோ தொழில்முறை நீச்சல் வீராங்கனை அல்ல. 1914ஆம் ஆண்டு பிறந்தவரான மீக்கோவுக்கு 80 வயதை தாண்டும் வரை நீச்சல் என்றால் என்னவென்றே தெரியாது. அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 82 வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

நீச்சல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்ட அவர், 2002ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார்.

அங்கு முதன் முறையாக தான் கலந்துகொண்ட 50 மீற்றர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று மீக்கோ சாதனை படைத்தார். அதன் பின் 2004ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 50 மீற்றர், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

தனது 90 வயதை எட்டியபோது, அவருக்கு ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 800 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பின்புற நீச்சல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்தார். இதை தொடர்ந்து பயிற்சியாளரை வைத்துக்கொண்டு தொடர் பயிற்சிகளை மீக்கோ மேற்கொண்டு வந்தார்.

அதன் பின் நடைபெற்ற 50 மீற்றர் பின்புற நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்ததுடன், நீச்சல் போட்டியில் இதுவரை 24 உலக சாதனைகளை மீக்கோ படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

"100 வயது மூதாட்டி தண்ணீரில் சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty