இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை
18-04-2015 02:28 PM
Comments - 0       Views - 572

18 வயது இளைஞரின் இதயத்துடிப்பை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சையொன்றை மேற்கொண்டு சேலம் அரசு மருத்துவமனை  சாதனை செய்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் கடும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூலம் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டு, நான்கு மணித்தியாலங்கள் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

"இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty