சுற்றுலாவுக்கான சொர்க்கபுரி...
29-05-2015 12:25 PM
Comments - 0       Views - 2023

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கைக்கான சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 02 மில்லியனாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் வருமானமீட்டும் துறைகளில் நான்காவது இடத்தையும் வகித்து வருகின்றது.  

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசதாரண சூழ்நிலைகள் இல்லாமல் செய்யப்பட்டு இன்று சுமூகமான நிலை தோன்றியுள்ளது.

சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்ற இடங்களில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது.

இங்கு இயற்கையாகவே அமைந்த குடா மற்றும் கடல் அலை சறுக்கல் சாகச விளையாட்டுக்கு மிகவும் பெயர் போன இடமாகத் திகழ்கின்றது. சேர்பிங் விளையாட்டுக்கு உலக தரப்படுத்தலில் அறுகம்பை 10ஆவது இடத்தை வகிக்கின்றது.

அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள பூமுனை இயற்கை சரணாலயம், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், மலைகள் மற்றும் புராதன சின்னங்கள் ஆகியவை காணப்படுவதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகங்கள், ஹோட்டல்கள் என்பன இத்துறைக்கு சாதகமாக அமைந்துள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைதருகின்றனர். சுமார் 02 இலட்சம் வரையிலான சுற்றுலாப்பயணிகள் ஒரு வருட காலப்பகுதியில் வருகைதருவதாக இலங்கை சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜுவ்பர் தெரிவித்தார்.

"சுற்றுலாவுக்கான சொர்க்கபுரி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty