நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் காலமானார்
27-06-2015 03:53 PM
Comments - 0       Views - 602

எஸ்.குகன்

பிரபல நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் தனது 91 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை (26) காலமானார்.

கொழும்பில் வசித்து வந்த அவர், சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காலமானார்.

சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 15 ஆவது வயது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். இவர் கலைக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

லயஞான குபேர பூபதி, இசை வள்ளல், நாதஸ்வர கலாமணி, நாதஸ்வர இசை மேதை, நாதஸ்வர சிரோண்மணி, நாதஸ்வர கான வாரிதி,   சுவர்ண ஞான திலகம், சிவகலாபூஷணம், கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.

 

 
"நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty