2024 மே 13, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Thipaan   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை பிரதான வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக்கு முன்னால் நேற்று (30) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓரே திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பெற்றோல் நிலையத்துக்கு செல்வதற்கான சமிஞ்சையுடன் திரும்பிக் கொண்டிருக்கையில், அவதானமின்றி பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னர் இரு சாராரும் சமாதான உடன்படிக்கைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X