2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெனிசுவேலாவில் நபரொருவர் தீ மூட்டப்பட்டார்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கு எதிராக,  புதிய வீதி ஆர்ப்பாட்டமாக, வைத்தியர்கள், நேற்று  (22) பேரணியாகச் சென்றுள்ள நிலையில், ஆத்திரமடைந்த சனத்திரளொன்றினால் தீ முட்டப்பட்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான ஹியூகோ சாவேஸின் மாநிலமான பரினாஸில் இடம்பெற்ற வன்முறையான கலகங்களில், துப்பாக்கிச் சூட்டு காயங்களால் மூவர் கொல்லப்பட்ட நிலையில், எட்டாவது வாரத்தைத் தொடும் ஆர்ப்பாட்டங்களில், இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.   

இந்நிலையில், பரினாஸின் மேற்கு நகரமொன்றில், அரசாங்க அலுவலகமொன்றையும் பொலிஸ் காரொன்றினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்துள்ளனர்.   

இதேவேளை, தலைநகர் கராகஸின் புறநகர்களில், தடைகளைக் கொண்டு, வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கிய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே புதிய மோதல்கள் இடம்பெற்றிருந்தன.   

வெனிசுவேலா மருத்துவ சம்மேளனத்தின் 20,000 அளவிலான ஆதரவாளர்கள், கராகஸிலுள்ள சுகாதார அமைச்சை நோக்கிச் சென்ற நிலையில், இவர்களைக் கலைப்பதற்காக, பொலிஸார், கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.   

இந்நிலையில், கராகஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றிலேயே, நபரொருவர் அடிக்கப்பட்டு பெற்றோல் ஊத்தி கொழுத்தப்பட்டிருந்தார். ஜனாதிபதி மதுரோவின் ஆதரவாளர் என்பதாலேயே, குறித்த நபர் தாக்கப்பட்டதாக, வெனிசுவேலா அரசாங்கம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .