2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நானும் ரௌடிதான் அனிருத்

George   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள நானும் ரௌடிதான்; திரைப்படத்துக்கு வழக்கம் போலவே தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இசையமைக்கிறாராம்.
கடந்த சில நாட்களாக இந்த படத்துக்கு தூங்காமல் கூட பின்னணி இசையமைத்து வருவதுடன்  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து இசையமைத்து வருவதாக அனிருத் கூறியுள்ளார்.

நானும் ரௌடிதான்; திரைப்படம் ஆரம்பமானதிலிருந்தே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் தனுஷ் தயாரிப்பில் அவரின் செல்லத் தம்பியான சிவகார்த்திகேயனின் போட்டியாளர் எனக் கருதப்படும் விஜய் சேதுபதி நடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து, திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நாயகி இடையே காதல் என கிசுகிசு வந்து இரண்டாவது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போதாதென்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன்; திரைப்படம் வெளியாவதாகச் சொல்லப்படும் ஒக்டோபர் 2ஆம் திகதி நானும் ரௌடிதான்; வெளியாகப் போவதாகச் சொல்லி மூன்றாவது பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளனர்.

எப்படியோ தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களை செலவேயில்லாமல் செய்திகள் மூலமாகவே விளம்பரப்படுத்துவது எப்படி என்பதை தனுஷ் நன்றாக கற்று வைத்திருக்கிறார் போல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .