2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாணசபை மேற்கொள்ள வேண்டுமென அம்மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேலும், இந்த மாகாணத்தில் மூன்று தசாப்தகாலமாக காணப்பட்ட யுத்த சூழ்நிலையிலும் அர்ப்பணிப்புடன் இன்றுவரை முன்பள்ளி ஆசிரியர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான விசேட கொடுப்பனவை  கடந்த அரசாங்கத்தில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது.

எனவே, கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களையும் இணைத்து நிரந்தர சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சரவை இணைந்து மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .