2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கீதாவின் எம்.பி பதவி இரத்து: பியசேனவுக்கு வாய்ப்பு?

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படும் அபாயம் நிலவுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கைக்கான இரட்டைக் குடியுரிமையை கீதா குமாரசிங்க பெற்றுள்ளதாலேயே அவரது எம்.பி பதவி ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக மேற்படி அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கீதாவின் எம்.பி பதவி இரத்தாகும் பட்சத்தில், விருப்பு வாக்குகளின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இது தொடர்பில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்துக்கான பிரஜாவுரிமையை தான் ஏற்கெனவே நீக்கிக்கொண்டுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .