2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கருணாநிதியை முந்திய ஸ்டாலின்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் முதலமச்சராக யார் வர வேண்டும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், தி.மு.க சார்பாக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை விட, அவரது மகனான மு.க ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. எனினும், ஒட்டுமொத்த ஆதரவில் தற்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவே முன்னிற்கிறார்.

சமூக - அரசியல் ஆராய்ச்சி நிறுவனமொன மக்களின் ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், 28 மாவட்டங்களிலுள்ள 80 தொகுதிகளிலிருந்து 3,370 பேர் பங்குகொண்டுள்ளனர்.

இதன்படி, முதலமைச்சர் பதவிக்கு அ.தி.மு.க வர வேண்டுமென 34.1 சதவீதம் பேரும், அக்கட்சி சார்பாக ஜெயலலிதா வர வேண்டுமென 31.56 சதவீதமானோர் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

தி.மு.க வர வேண்டுமென 32.6 சதவீதம் பேர் தங்கள் விருப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவர்களில் 27.98 சதவீதம் பேர் மு.க. ஸ்டாலினையும், 21.33 சதவீதம் பேர் கருணாநிதியையும் அவர்களது தெரிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .