2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜமைக்கா வசமானது 100 மீற்றர் அஞ்சல்

Administrator   / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் 15ஆவது தடகள சம்பியன்ஷிப்ஸ் தொடரின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில், ஜமைக்க அணி தங்கப் பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளது.

ஆண்களுக்கான பிரிவில், நெஸ்டா கார்டர், அசாஃபா பவல், நிக்கெல் அஷ்மெடே, உசைன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி, 37.36 செக்கன்களில்அத்தூரத்தை நிறைவுசெய்து, தங்கம் வென்றனர்.

அத்தூரத்தை 38.01 செக்கன்களில் நிறைவுசெய்த சீன அணி 2ஆம் இடத்தையும் 38.13 செக்கன்களில் நிறைவுசெய்த கனடா அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
பெண்களுக்கான பிரிவில், வெரோனிக்கா கம்ப்பெல் பிரௌண், நட்டாஷா மொரிசன், எலான்யி தொம்ப்ஸன், ஷெலி ஆன் ஃபிறேசர் பிறைஸ் அடங்கிய ஜமைக்க அணி, 41.07 செக்கன்களில் ஓடிமுடித்து, தங்கம் வென்றனர்.

இப்போட்டியில், 41.68 செக்கன்களில் ஓடிமுடித்த அமெரிக்க அணி இரண்டாமிடத்தையும் 42.03 செக்கன்களில் ஓடிமுடித்த ட்ரினிடாட் அன்ட் டொபாகோ அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
பதக்கங்களின் பட்டியலின்படி, 6 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ள கென்ய அணி முதலிடத்தையும், 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஜமைக்க அணி இரண்டாமிடத்தையும், 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ள அமெரிக்க அணி மூன்றாமிடத்தையும் கைப்பற்றியுள்ளன.

பெரிய பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் அணி 4 தங்கங்களையும், போலந்து 3 தங்கங்களையும், எதியோப்பியா, ரஷ்யா, கியூபா மூன்றும் தலா 2 தங்கங்களையும் கைப்பற்றயுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .