2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதலிடத்தைப் பிடித்தது கென்யா

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடகள சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தினால் நடாத்தடும் உலக தடகள சம்பியன்ஷிப்ஸ் தொடரின் 15ஆவது வருடத் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற இத்தொடரில், கென்ய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

22ஆம் திகதி ஆரம்பித்துவந்த இப்போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 1,933 தடகள வீர, வீராங்கனைகள் பங்குகொண்டனர்.

இதிலேயே, 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றிய கென்யா, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றிய ஜமைக்கா, இரண்டாமிடத்தைப் பெற்றது.

6 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றிய ஐக்கிய அமெரிக்க 3ஆவது இடத்தைக் கைப்பற்றிய அதேவேளை, 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பெரிய பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் நான்காமிடத்தையும் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் எதியோப்பியா ஐந்தாமிடத்தையும் பெற்றன.போலந்து 3 தங்கங்களையும், கனடா, ஜேர்மனி, ரஷ்யா, கியூபா ஆகியன தலா 2 தங்கங்களையும் கைப்பற்றின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .