2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத்தல விவகாரம்: சூரியவெவவில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகளில், நெற்களை களஞ்சியப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி சூரியவெவ நகரத்தில் கறுப்பு கோடிகளை ஏந்தியவாறு சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென் மாகாண சபையின் உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ, கபில திஸாநாயக்க, சூரியவெவ பிரதேச சபையின் தலைவர் ஜே.ஏ.ஜனக மற்றும் உப-தலைவர் யுகத் காமினி ஆகியோரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

நகரத்தில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. கடைகளை திறக்குமாறு ஒலிப்பெருக்கிகள் ஊடாக பொலிஸார் அறிவிப்புகளை விடுத்துள்ள போதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .