2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஜெனிவாவுக்கு விஜயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

இலங்கையின் முதற்பெண்கள் தொழிற்சங்கமான, உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கே. யோகேஸ்வரி, ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான 23ஆவது செயலமர்வில் பங்குபற்றுவதற்காக, நேற்று வியாழக்கிழமை (03) ஜெனிவாவுக்கு பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின், அனைத்து புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான, ஐக்கிய நாடுகள் சபை குழுவின் 23ஆவது செயலமர்வு எதிர்வரும் 2015, செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா தலைமையகத்தில் நடைபெறுவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவே அவர் ஜெனிவாவுக்கு பயணமானார்.

இச்செயலமர்வை உலக தொழிலாளர் ஸ்தாபனமும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான சர்வதேசமும், ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளது. இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள இவர், 2011ஆம் ஆண்டு முதல் புலம்பெயர் பெண் தொழிலார்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வீட்டுப் பணியாளர்களின் உரிமை தொடர்பாகவும், இலங்கையின் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் தொடர்பாகவும் அவ்வப்போது இலங்கை தொழில் அமைச்சுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஏற்புரை செய்து வந்துள்ளதுள்ளார்.

மேற்படி செயலமர்வில் கலந்துகொள்ளவிருக்கும் இவர், செயலமர்வின் போது, நம்நாட்டிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப் பெண்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .