Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கழகச் சங்கத்தினால் வழங்கப்படும் வருடாந்த விருதுகளில், பார்சிலோனா, ஆர்சனல் ஆகிய கழகங்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இவை தவிர, உக்ரேனியக் கழகமான நிப்ரோ நிப்ரோபெட்ரோவ்ஸ்க், எஸ்தோனியக் கழகமான லெவாடியா தல்லின் கால்பந்தாட்டக் கழகம் ஆகியனவும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
ஐரோப்பாவின் சிறந்த கழகத்துக்கான விருதுதை, பார்சிலோனா கழகம் வென்றது. 2014-15 பருவகாலத்தில், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த சமுதாய, சமூகப் பொறுப்புக்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கான விருதை, ஆர்சனல் வெற்றிகொண்டது. இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்காக, அக்கழகம் மேற்கொள்ளும் ஆர்சனல் வேலைத்திறன் நிகழ்ச்சித் திட்டத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விளையாட்டின் சிறந்த முன்னேற்றத்துக்கான விருதை நிப்ரோ கழகமும், சிறந்த அடைவுக்கான விருதை லெவாடியா தல்லின் கழகம் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .