2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வடக்கில் பெற்றோரை இழந்த 7,000 சிறுவர்கள் இருக்கின்றனர்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யுத்தத்தால் பெற்றோரை இழந்த நிலையில் வட மாகாணத்தில் மாத்திரம் சுமார் 7,000 சிறுவர்கள் இருப்பதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சராக நேற்று புதன்கிழமை (09) பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவயங்களை இழந்த நிலையிலும் பெற்றோரை இழந்த நிலையிலும் பல சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கான நடவடிக்கைகளை எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்வேன். ஏனைய மாகாணங்களிலுமுள்ள இவ்வாறன சிறுவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார். 

'சிறுவர்களின் கல்வியானது தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் அதிக அக்கறை எடுத்துச் செயற்படுவேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .