Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டதில், முறைகேடுகள் இடம்பெற்றதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஏற்கெனவே அழுத்தத்துக்குள்ளாகியுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீபா) தலைவர் செப் பிளட்டர், மேலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளார்.
ஃபீபா உப தலைவராகக் கடமையாற்றிய ஜக் வோணர், 2005ஆம் ஆண்டு கரீபியன் கால்பந்தாட்ட ஒன்றியத்திற்குத் தலைவராகவும் காணப்பட்டதோடு, 2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 600,000 அமெரிக்க டொலர்களுக்கு, ட்ரினிடாட் அன்ட் டொபாகோவுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வொன்றியத்துக்கு வழங்கப்பட்ட ஒளிபரப்பு உரிமையை, ஜக் வோணரின் நிறுவனமான ஜே.டி.ஐ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அந்ந உரிமையை, ஜே.டி.ஐ நிறுவனம், ஜமைக்காவைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ்மக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, 18 தொடக்கம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் கைமாமற்றியுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கையின் போது, ஜக் வோணருக்கு 17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கலாம் என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .