2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

ரொஷான் மகாநாமா விலகல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது குடும்பத்துடனும், தனது வர்த்தக நடவடிக்கைகளுடனும் இலங்கையில் மேலதிக நேரத்தை செலவளிக்கும் பொருட்டு, இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ரொஷான் மகாநாமா, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் எலைட் போட்டி நடுவர் குழாமிலிருந்து இந்த வருட இறுதியுடன் விலகவுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு எலைட் குழுவில் இணைந்த மகாநாமா, 58 டெஸ்ட் போட்டிகளுக்கும், 222 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும், 35 சர்வதேச இருபது-20 போட்டிகளுக்கும் போட்டி நடுவராக இதுவரை கடமையாற்றியுள்ளார். இதில் மூன்று உலகக்கிண்ணங்களும், 2009 சம்பியன்ஸ் கிண்ணமும் அடங்குகின்றன. இவரை பிரதி செய்யும் நபர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஐ‌சி‌சி தெரிவித்துள்ளது.

தான் கிரிக்கெட் தொடர்பில் மிகவும் விருப்புடன் இருந்ததாகவும், அதனால் இம்முடிவு கடினமாக இருந்ததாகவும் மகாநாம தெரிவித்துள்ளார்.

மகானாமாவினுடைய பங்களிப்புக்காக நன்றி தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் பொது முகாமையாளர் ஜெஃப் அல்லார்டீஸ், எலைட் பிரிவின் முக்கிய நபராக மகாநாமா இருந்ததாக கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X