2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

ஃபீபா மோசடிகள் : விரைவில் மேலும் கைதுகள்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் ( ஃபீபா) இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக, மேலதிகமான கைதுகள் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக, ஐக்கிய அமெரிக்காவின் சட்டமா அதிபர் லொரெட்டா ஈ. லின்ச் தெரிவித்துள்ளார்.
 

ஃபீபாவின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்ஸர்லாந்தில் வைத்தே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அமெரிக்காவை பிரதானமாக மையப்படுத்திக் காணப்பட்ட இவ்விசாரணைகள், ஐரோப்பாவில் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'தனிநபர்களுக்கெதிராகவும் நிறுவனங்களுக்கெதிராகவும் மேலதிக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் நாம் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வாழ்ந்துகொண்டு, ஊழல், இலஞ்சம், நண்பர்களைப் பதவியில் அமர்த்துவது போன்ற கடந்த கால நாட்களுக்கு எடுத்துச் செல்ல முயல்வோர், முன்னேற்றத்தின் தவறான பாதையில் இருக்கிறீர்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஊழல்களோடு சம்பந்தப்பட்ட அல்ப்ஸ்-இலுள்ள உடமைகளைக் கைப்பற்றியுள்ளதோடு 121 வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவினது நிபுணத்துவம் மிகுந்த உதவியானதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X