Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது கடும் உழைப்பும் அதிகமான சிரிப்பும் இணைந்ததாகக் காணப்பட்ட நிலையிலேயே, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செல்சி அணியின் மோசமான பெறுபேறுகளையடுத்து, இன்று இரவு இடம்பெறவுள்ள மக்கபி டெல் அவிவ் அணிக்கெதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியிலும் செல்சி அணி வெற்றிபெறாவிட்டால், அவ்வணிக்கான அழுத்தங்கள் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .