‘Into the Woods’ fall
20-09-2015 12:35 PM
Comments - 0       Views - 105

fall தெரிவுகள் தற்போது உலகம் முழுவதும் மக்களை கவரத் தொடங்கியுள்ளது. இலங்கையிலும் அதற்கு விதிவிலக்கில்லை. ஒடெல் இலங்கையில் அதற்கான சந்தர்ப்பததை வழங்கியுள்ளது. உலகின் நவநாகரிக தலை நகரங்களை இந்த உற்பத்திகள் தற்போது ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இயற்கையை அண்டிய வடிவமைப்புக்களை கொண்ட இந்த உற்பத்திகளுள் இரு வகைகளை ஒடெல் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையின் முன்னணி நவநாகரிக உற்பத்திகளின் சில்லறை விற்பனையாளர்களான ஒடெல் கொழும்பு-07 அலக்ஸாண்டிரா பிளேஸில் உள்ள பிரதான காட்சியகத்தில் அதன் அட்ரியம் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற கண்கவர் நவீன ஆடைகளின் காட்சி அணிவகுப்பில் இந்தப் புதிய உற்பத்திகளை செப்டம்பர் மாதம் நான்காம் திகதி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தது. இலையுதிர் காலத்தின் இயற்கை உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் ‘Into the Woods’ எனும் தொனிப் பொருளில் இது அமைந்தது.

இந்தப் புதிய odel fall தொகுப்புக்கள் நான்கு நவநாகரிக வகைப்படுத்தல்களின் கீழ் அமைந்திருந்தன. பிரதான தொகுப்பின் ‘fairy Forest’ தொனிப் பொருளோடு கண்கவர் வகையில் இது நிறைவுக்கு வந்தது.

கவர்ச்சி மிக்க பறவைகள், மரங்கள், பசுமை தொகுப்பு, மற்றும் தாவரங்கள் பூக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்புக்கள் மற்றும் அவற்றுக்கு மிகவும் இசைவான பச்சை, கபிலநிறம், கறுப்பு,வெள்ளை, செம்மஞ்சள் என கண்கவர் நிறங்களோடு இவை காணப்பட்டன.

உலகத் தரம் வாய்ந்த துணிகளில் ஏலீசாப், க்ளொயி, அன்டோனியோ மராஸ், அல்பர்டா பெரிடி போன்ற உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களின் கைவண்ணங்களை பிரதி பலிக்கும் வகையில் இவை அமைந்திருந்தன.

இது தவிர 'வின்டர் நொமாட்'என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் வித்தியாசமான ரசனைகளைக் கொண்ட விஷேட தொகுப்பும் காணப்பட்டது.

ஒடெல்லின் 2015 fall தொகுப்பின் கீழ் சர்வதேச ரசனைக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்கவர் நவநாகரிக ஆடை அணிவகுப்பில் மேலதிகமான கலைத்துவத்தை காணக் கூடியதாக இருந்தது.

'உலகின் நவநாகரிக போக்கிற்கு ஏற்ற வகையில் ஒடெல் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தெர்வுகளை வழங்குவதில் நாம் பெருமை அடைகின்றோம். இலங்கையில் குறிப்பிடத்தக்க இவ்வாறான காலப்பகுதி இல்லா விட்டாலும் கூட அது தொடர்பான நவநாகரிக வாய்ப்பை வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்' என்று கூறினார் ஒடெல் சில்லறை விற்பனை செயற்பாட்டு பிரிவுக்கு பொறுப்பான சொப்ட் லொஜிக் குழுமத்தின் சந்தைப் படுத்தல் பணிப்பாளர் டெஸிரி கருணாரட்ண. 'நவநாகரிகம் என்பது ஒரு உலக மொழி. கவர்ச்சிகரமான ஒரு நவநாகரிக ஆடை அலங்கார காட்சி மூலம் சிறந்த தொகுப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒடல் எதிர் பார்க்கின்ற ஒரு தரமாகும்' என்று அவர் மேலும் விளக்கினார்.

ஒடெல் fall 2015 நவ நாகரிக ஆடை கண்காட்சியின் ஒரு சில பகுதியை படத்தில் காணலாம்.

"‘Into the Woods’ fall" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty