2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பிறகு எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்துடான இறுதி ஒருநாள் சர்வதேசப்போட்டியிலேயே பற் கம்மின்ஸ் கீழ் முதுகுப் பகுதியில் நோவை உணர்ந்ததாகவும், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய பின் இது தொடர்ந்ததாகவும், புதன்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கானில், கீழ் முதுகுப் பகுதியில் உள்ள என்பில் ஆரம்பக்கட்ட முறிவு இருப்பது தெரியவந்ததாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் உடற்கூற்று நிபுணர் டேவிட் பீக்லி தெரிவித்தார். இதனால் பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நீண்ட கால மீள் வருகைக்கான செயற்பாடுகளில் உள் நுழைவதாகவும் தெரிவித்தார்.

கம்மின்ஸ், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், நவம்பர் 2012, மறுபடியும் தொடர்ச்சியாக ஓகஸ்ட் 2013 இலும் இதே வகையான காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்கமுடியாமலிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X