Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.
ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது.
65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற கோல் காரணமாக ஒலிம்பியாகொஸ் முன்னிலை பெற்றதோடு, இறுதியில் வெற்றிபெற்றது.
செல்சி அணிக்கெதிரான போட்டியில், எப்.சி போர்ட்டோ கழகம், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
39ஆவது நிமிடத்தில் அன்ட்ரே அன்ட்ரே பெற்ற கோலினால் போர்ட்டோ முன்னிலை வகித்த போதிலும், முதற்பாதி இறுதி நிமிடத்தில் வில்லியன் பெற்ற கோலினால், 1-1 என்ற கணக்கில் முதற்பாதி முடிவடைந்தது.
எனினும், இரண்டாவது பாதி ஆரம்பித்துச் சில நிமிடங்களில், போர்ட்டோ அணியின் மைகன் பெற்ற கோல் காரணமாக, அவ்வணி முன்னிலை பெற்றதோடு, இறுதியில் வெற்றிபெற்றது.
இதேவேளை, பார்சிலோனா அணிக்கும் பயெர் லெவெர்குசென் அணிக்குமிடையிலான போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
முதற்பாதியில் லெவெர்குசென் அணி 1-0 என முன்னிலை வகித்த போதிலும், போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கையில் சேர்ஜி றொபேர்ட்டோவும் 8 நிமிடங்கள் இருக்கையில் லூயிஸ் சுவரேஸூம் கோல்களைப் பெற்று, பார்சிலோனா அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .