Kogilavani / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறிய காயங்களுக்குள்ளான ஐந்து பேர், மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .