2024 மே 08, புதன்கிழமை

சிரேஸ்ட பாடசாலை கல்வியியலாளர் ஒன்றியம் உருவாக்கம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களின் பங்களிப்புடன் சிரேஸ்ட பாடசாலை கல்வியியலாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்விப்புலத்தை வலுப்படுத்தி, வழிப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு, வடமாகாண அதிபர்சங்கம், கல்வி மேம்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட பாடசாலைகளின் விளையாட்டு சங்கம், ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் யாழ்.ரில்கோ விடுதியில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, மேற்படி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இவ்வொன்றியத்தின் தலைவராக, வடமாகாண ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன், செயலாளராக மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் எஸ்.சிவநேஸ்வரன், உபதலைவர்களாக ஓய்வு பெற்ற மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் க.சிவராசா, வலிகாம வலய ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் திருமதி ரெஜீனா இருதயநாதன்,  உபசெயலாளராக நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் எஸ்.சேதுராஜா, பொருளாளராக  பிரதிக்கல்விப்பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன், பத்திராதிபராக விக்ரோறியா கல்லூரியின் ஒய்வு நிலை அதிபர் வ.ஸ்ரீகாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வடமாகாண அதிபர் சங்கம், கல்வி மேம்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட பாடசாலை விளையாட்டு சங்கம் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவி வழி செயற்குழு உறுப்பினர்களாகவும் சிரேஸ்ட பாடசாலை கல்வியாளர்கள் 25  பேரைக் கொண்ட வகையில் செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை கல்விப்புலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தளர்வுப்போக்கை நீக்கி, மாணவர் ஒழுக்கத்துக்கு முதன்மை கொடுத்து பாடசாலை அதிபர்களை வலுப்படுத்தவதுடன்,  கல்விச்செயற்பாடுகளை வலுப்படுத்தி முன்னைய யாழ்ப்பாண பாரம்பரிய செயற்பாடுகளுடன் கல்விப்பாரம்பரியத்தை மீள கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதை நோக்கமாகக்கொண்டு, இந்த ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X