2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் பிரதமராகும் எண்ணம்: மலாலா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதம் தொடர்பில் பாகிஸ்தான் தலைவர்களின் மௌனத்தை கேள்விக்குட்படுத்தியுள்ள நொபெல் பரிசு வெற்றியாளரான மலாலா யூசுப்ஸாய், தனது நாடான பாகிஸ்தானின் பிரதமராகும் எண்ணம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற 'நிலைத்த அபிவிருத்திக்காக முதலில் கல்வி" மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாஸிர் பூட்டாவைத் தனது பிரதான முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுவதாகத் தெரிவித்த அவர், 'பெண்ணொருவரால் தலைவராக முடியாது என்பதைப் பலர் மறுத்தனர். ஆனால், பெண்ணொருவர் தலைவராக இருக்க முடியுமென அவர் காட்டினார்" எனத் தெரிவித்தார்.

பெனாஸிர் பூட்டோ போன்று பிரதமராகும் எண்ணம் உள்ளதாக எனக் கேட்கப்பட்டபோது, 'மக்கள் வாக்களித்தால், நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், சிறுவர்களுக்குக் கல்வி கிடைப்பதே எனது கனவாகும்" எனத் தெரிவித்தர்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'ஸ்வாட் பள்ளத்தாக்கில் இடம்பெறும் பயங்கரவாதம் தொடர்பாக எதற்காக பாகிஸ்தான் தலைவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்? சிறுமிகளுக்குக் கல்வி மறுக்கப்படும் போதோ அல்லது பெண்கள் வீதிகளில் வைத்து அடிக்கப்படும் போதோ, அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?" என, மேலும் கேள்வியெழுப்பினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .