2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாடுகளை நடையாக கொண்டுசென்றவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை கால்நடையாக கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இன்று வெள்ளிக்கிழமை 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

கிண்ணியாவிலிருந்து வெல்லாவெலிப் பிரதேசத்திற்கு லொறியில் ஏற்றிவந்த மாடுகளை வெல்லாவெளியிலிருந்து கால்நடையாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு கொண்டுசென்ற வேளையில் அம்பாறை சவளக்கடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (08) குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர் அபராதம் விதித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .