2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்க் ஆனந்த்

வட மாகாணத்துக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து, மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வட மாகாண விவசாய அமைச்சர்; பொ.ஐங்கரநேசன் தலைமையில் உயிலங்குளம் வண்ணாமோட்டையில் அமைந்துள்ள விவசாய பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்றது.

 மன்னார் மாவட்ட விவாசயிகள் குறித்த உள்ளீடுகள்; மூலம் உற்பத்தியை அதிகரிப்பதுடன் சூழல் பாதுகாப்பையும் பேணவேண்டும் என அதிதிகள் தெரிவித்தனர்.

இதன்போது காளான், பெரியவெங்காயம், பழவகைகள், எள்ளு, நெல் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கான உள்ளீடுகளை வடக்கு விவசாய அமைச்சர் வழங்கிவைத்தார்.

2015ஆம் ஆண்டிற்காக விவசாய உள்ளீடுகள் வழங்க 16.72 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 400விவசாயிகளுக்கு 3.5 மில்லியன் ரூபாய் பெறுமதியாக விவசாய உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்;களான அந்தோனி சூசைரெட்ணம் பிறிமுஸ் சிராய்வா, ஞானசீலன் குணசீலன், வட மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார், அதன் பிரதி பணிப்பாளர்; திருமதி அஞ்சனா தேவி ஸ்ரீரங்கன், வட மாகாண கல்நடை சுகாதார பணிப்பாளர் வசிகரன்,  விவசாய மற்றும் கால்நடைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .