Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையில் காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
அஞ்சலோ மத்தியூஸ் என்ற ஓரளவு அனுபவமிக்க தலைவரின் கீழான இளைய அணியொன்றும் ஜேஸன் ஹோல்டர் என்ற அனுபவம் குறைந்தவரின் கீழான இளைய அணியொன்றும் இப்போட்டியில் மோதுவதால், எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இப்போட்டி அமையவுள்ளது.
இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இலங்கை முழுவதுமாக நிலவுகின்ற மழை வானிலை காரணமாக, இப்போட்டியானது மழையால் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:
இலங்கை: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், மிலிந்த சிரிவர்தன, குசால் பெரேரா, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஷால், நுவான் பிரதீப், ரங்கன ஹேரத்.
மேற்கிந்தியத் தீவுகள்: கிறெய்க் பிறெத்வெய்ட், ராஜேந்திர சந்திரிகா, டெரன் பிராவோ, ஷேன் டவ்றிச், ஷாய் ஹோப், ஜேர்மைன் பிளக்வூட், டினேஷ் ராம்டின், ஜேஸன் ஹோல்டர், வீரசம்மி பேர்மாள், கேமர் றோச், ஜெரோம் டெய்லர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .