Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 15 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இவ்வாறான குற்றமொன்றை அவர் புரிந்தால், ஒரு போட்டிக்கு மைதானத்தில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்.
இந்நிலையில், விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்றுக் கொள்வதாக செல்சியும் மொரின்ஹோவும் அறிவித்த போதிலும், 12 மாதங்களுக்கு நடத்தைக் கண்காணிப்பில் வைக்கும் ஒத்திவைக்கப்பட்ட தடைக்கு, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .