2026 மார்ச் 19, வியாழக்கிழமை

மொஹமட் சித்தீக், புலிகளுக்கு நிதியுதவி : சி.ஐ.டி

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் சித்தீக், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நிதியுதவி செய்திருப்பதாக குற்றப்புலனாய் பிரிவினர் (சி.ஐ.டி)  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

சித்தீக்கின் மனைவினுடைய வங்கிக் கணக்கில் பலர், வைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இது தொடர்பில்  இன்டர்போலின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக இந்த வங்கிக் கணக்குகள் சித்தீக்கினால் நிர்வகிக்கப்பட்ட போதும் பின்னர் அவை மனைவியினால் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சித்தீக், பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X