2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

இலங்கைக்கு இனிங்ஸ் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலியில் இடம்பெற்றுவந்த இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டு, 2 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்று, ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜேர்மைன் பிளக்வூட் 92 ஓட்டங்களையும் கிறெய்க் பிறெத்வெய்ட் 34, டெரன் பிராவோ 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் தம்மிக்க பிரசாத், மிலிந்த சிரிவர்தன இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, திமுத் கருணாரத்னவின் 186, டினேஷ் சந்திமாலின் 151 ஓட்டங்களின் துணையோடு, 484 ஓட்டங்களைப் பெற, பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ரங்கன ஹேரத்தின் 6 விக்கெட் பெறுதியில் சுருண்டு, 251 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக, ரங்கன ஹேரத் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X