2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

இலங்கைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஐந்து பேர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு ஐந்து பேர் விண்ணப்பித்துள்ளதாக இடைக்கால இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஆறாம் திகதிக்கு முதல் விண்ணப்பங்களை அனுப்பிய ஐந்து பேரும் வெளிநாட்டினரே என்று தெரிவித்துள்ள அவர், எனினும் தங்களது பெயர்கள் வெளியிடப்பட்டாது என்ற நம்பிக்கையின் பெயரிலேயே அவர்கள் விண்ணப்பித்திருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இடைக்கால நிர்வாக சபைக் கூட்டத்தின்போது, விண்ணபித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நடவடிக்கை என ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம், இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் இடம்பெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள நிலையில், விரைவில் புதிய நிர்வாகம் பதவிக்கு வர வாய்ப்புள்ளது.

எனினும் தெரிவு செய்யப்படும் பயிற்றுவிப்பாளருக்கு இரண்டு வருட ஒப்பந்த காலம் வழங்கப்படுமெனவும், அவரின் செயற்பாடுகள் ஒருவருடத்தின் பின்பு ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

மார்வன் அத்தபத்து பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பின் தற்போது ஜெரோம் ஜயரட்ன பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X