2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

துருக்கி ஒரு தடுப்பு முகாமல்ல

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலிருந்து துருக்கியை வந்தடைந்துள்ள அகதிகளனைவரும், துருக்கியில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதிக்க முடியாது என துருக்கிப் பிரதமர் அஹ்மட் தெவுடொக்லு தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கலுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''எங்களுக்குப் பணத்தைத் தருகிறீர்கள், அவர்கள் துருக்கியில் தங்கட்டும்" என்றவாறான புரிந்துணர்வொன்றை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. துருக்கிய ஒரு தடுப்பு முகாமல்ல" என அவர் தெரிவித்தார்.

'இதை நான் மேர்க்கெலிடமும் தெரிவித்தேன். எல்லா அகதிகளும் தங்கியிருக்கும் தடுப்பு முகாமாக துருக்கி மாற வேண்டுமென எவரும் எதிர்பார்க்கக்கூடாது" என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அங்கெலா மேர்க்கெலுடனான சந்திப்பானது நேர்முகமான முடிவுகளைத் தந்ததாக, பிரதமர் அஹ்மட் தெவுடொக்லு தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த அங்கெலா மேர்க்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் துருக்கியின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக, அங்குவரும் அகதிகளை ஏற்க வேண்டுமெனவும் ஐரோப்பாவால் நிராகரிக்கப்படும் அகதிகளையும் உள்ளெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .