2026 ஜனவரி 24, சனிக்கிழமை

ஜெனீவா தீர்மானத்தை தடுத்து நிறுத்துங்கள்: ஜி.எல்.பீரிஸ்

Gavitha   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை,  மஹாநாயக்க தேரர்  உள்ளிட்ட சமயத் தலைவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பிரீஸ் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து சமயத் தலைவர்களுக்கு ஜி.எல்.பிரீஸ்
எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மாத்திரமே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் கூறினார்.

எனினும், நாட்டில் அரசியல் மறுசீரமைப்பை உருவாக்குவதற்கோ ஏனைய உள்ளக விடயங்களில் தலையிடுவதற்கோ ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் சிறந்தது என நினைக்கும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செய்வதற்கு நிர்ப்பந்திக்குமாயின் நாட்டில் நாடாளுமன்றம் இருப்பதன் பயன் என்னவென ஜி.எல் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X