2026 மார்ச் 19, வியாழக்கிழமை

யாழ்ப்பாண குடிநீர் தேவைக்கு 5 திட்டங்கள்

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,  483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 செயற்றிட்டங்கள், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த, 64.51 மில்லியன் ரூபாயும்  பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க 33.17 மில்லியன் ரூபாயும், பொக்கனையிலிருந்து சுன்னாகம், நிலாவரை பகுதிக்கு நீர் வழங்க 35.00 மில்லியன் ரூபாயும், வல்வெட்டித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து அக்கரைக்கு நீர் வழங்க 12 மில்லியன் ரூபாயும், யாழ்.மாவட்ட கிராமிய மட்டத்திலான நீர் வழங்கலைச் செயற்படுத்த 338.38 மில்லியன் ரூபாயும் தேவைப்படுகின்றது.

இந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி மத்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதுடன், நிதி கிடைக்கப்பெற்ற பின்னர் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் ஊடாக இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X