2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்; சச்சின்&வோர்ண்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வோர்ணும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1900ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டானது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றிருக்காத போதும் அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளன.

கிரிக்கெட்டை ஒலிம்பிக் விளையாட்டாக பார்க்க விரும்புவதாகவும், யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாக வரலாம் என ஷேன் வோர்ண் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாவது சிறந்த யோசனை என்றும் இதற்கு இருபது-20 போட்டிகளே சிறந்ததாக இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.  

தங்களது புகழைப் பயன்படுத்தி கிரிக்கெட்டை பூகோள ரீதியாக எடுத்துச் செல்லும் பொருட்டு எதிர்வரும் வரும் மாதம் ஓய்வுபெற்றுள்ள முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர புறச் சுழற்பந்துவீச்சாளருமான ஷேன் வோணும் இணைந்து ஓல்ட் ஸ்டார் இருபது-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக சச்சின், வோர்ண் கோரிக்கை விடுத்தமையை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சபை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பததால் உலகக்கிண்ணம், உலக இருபது-20 பாதிக்கப்படும் என்ற கொள்கையை சர்வதேச கிரிக்கெட் சபை முன்னர் கொண்டிருந்தது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கின் போது இருபது-20 கிரிக்கெட் போட்டிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என கடந்த ஜூலை மாதம் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் உலக கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X