ஒராங்குட்டான்களின் சில்மிஷம்
28-10-2015 10:13 AM
Comments - 0       Views - 597

இந்தோனேஷியாவிலுள்ள காடுகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக அங்கு வாழும் ஒரங்குட்டான்கள் (மனித குரங்குகள்) அழிவை எதிர்கொண்டுள்ளன. இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் போர்னியா தீவிலுள்ள மீட்பு மையத்தில் வைத்து இவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் நோய்வாய்ப்பட்டுள்ள 16 ஓரங்குட்டான்கள், கலிமான்டனிலுள்ள போர்னியோ ஒரங்குட்டான் அறக்கட்டளை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, புகை மற்றும் வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல்  உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி அறக்கட்டளை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஒரங்குட்டான்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் கேலியும் கிண்டலுமிக்க விளையாட்டுக்களை கண்டு அதன் பராமரிப்பாளர்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

"ஒராங்குட்டான்களின் சில்மிஷம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty