Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இணைந்துள்ளார்.
கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள், 5 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவர்.
சங்கக்காரவின் ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி, 'சங்கக்கார, உலகத்தரம் மிக்க ஒர வீரர். அவரை இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏராளமான அனுபவத்தை அவர் இந்தத் தொடருக்குக் கொண்டு வருகின்றார். அவரது இணைப்பானது, தொடரின் வீரர் தெரிவை மேலும் சுவாரசியமாக்குகின்றது" என்றார்.
இதேவேளை, மற்றொரு இருபதுக்கு-20 தொடரான மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்குபற்றவும் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தொடர்களுமே ஏறத்தாழ ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதோடு, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இடம்பெறவுள்ளன. ஆனால், வேறு வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் இடம்பெறுமாயின், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை விட மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக்குக்கு அவர் முன்னுரிமை வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .