2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இன்று றக்பி உலகக் கிண்ண மூன்றாமிடத்துக்கான போட்டி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

றக்பி உலகக் கிண்ணத்துக்கான போட்டிகளில், மூன்றாமிடத்துக்கான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிறீன்விச் நேரத்தின்படி, இரவு 8 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணி) இப்போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், தென்னாபிரிக்க அணியும் ஆர்ஜென்டின அணியும் மோதவுள்ளன.

இலண்டனின் ஒலிம்பிக் அரங்கில், இப்போட்டி இடம்பெறவுள்ளது.
இக்கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொண்ட முன்னணி அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்க அணி, குழு 'பி"இல், ஜப்பானுக்கெதிரான அதிர்ச்சித் தோல்வி தவிர, ஏனைய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, காலிறுதியில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்திருந்தது. எனினும், அரையிறுதியில் வைத்து நடப்புச் சம்பியன்களிடம் தோல்வியடைந்திருந்தது.

மறுபுறத்தில் ஆர்ஜென்டினா, குழு 'சி"இல், நியூசிலாந்திடம் மட்டும் தோல்வியடைந்து, காலிறுதியில் வைத்து அயர்லாந்தை வெற்றிகொண்டிருந்தது. எனினும், அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

அரையிறுதியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியிலிருந்து, 2 மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காயம் காரணமாக புவரி டு பிறீஸ் விலக, அவருக்குப் பதிலாக றுவான் பியனார் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக, ஹெய்னேகே மெயேர் அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர, லொடெவைக் டி ஜாகெருக்குப் பதிலாக, விக்டர் மட்பீல்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில், அரையிறுதியில் பங்குபற்றிய ஆர்ஜென்டின அணியிலிருந்து, 11 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .